இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

 
school

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரியில் உள்ள இந்து மக்களுக்கு குல தெய்வமாக இந்த அம்மன் விளங்கி வருகிறார்.

Melmalayanur

இங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 18-ம் தேதி இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (பிப். 24) மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்த தேரோட்ட திருவிழாவில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள வசதியாக இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Local-holiday

அதன்படி இந்த உள்ளூர் விடுமுறை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற மார்ச் 4-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

From around the web