குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க!

 
TNPSC

குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி பல்வேறு நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. அதாவது குரூப் 1, 2, 2 ஏ, குரூப் 4 என பல தேர்வுகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், 2024-ம் ஆண்டில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC

இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வௌியிட்டது. குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் (ஜூலை 19) நிறைவடைவதாக இருந்தது. ஆனால், கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கூறி வலியுறுத்தினர்.

TNPSC

இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்.

From around the web