டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு... சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!!

 
TNPSC

தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய  சுகாதார அலுவலர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த நவம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதி என்று அறிவக்கப்பட்டிருந்தது.

TNPSC

இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலக அலுவலர் பணிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக எழுத்து தேர்வு பிப்ரவரி 13-ம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

TNPSC

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு செய்து ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web