TNPSC குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு.. முழு விவரம்!

 
TNPSC

தமிழ்நாட்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி பல்வேறு நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. அதாவது குரூப் 1, 2, 2 ஏ, குரூப் 4 என பல தேர்வுகள் நடைபெறுகின்றன.

TNPSC

அந்த வகையில் 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களை பொறுத்தவரை  முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

TNPSC

அந்த வகையில், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான  நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு  ஜூலை 13-ம் தேதி நடைபெற உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.  

From around the web