மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி 3 வயது சிறுவன் பலி.. திருப்பூரில் சோகம்!

 
Tiruppur

திருப்பூரில் தேங்கி கிடந்த மழை நீரில் 3 வயது சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர், பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு சக்திவேல் (3) என்ற குழந்தை இருந்தது. பனியன் நிறுவனத்துக்கு நேற்று கிருஷ்ணகுமார் சென்றிருந்த நிலையில், சங்கீதா மற்றும் மகன் சக்திவேல் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

water

இந்த நிலையில், மதியம் குழந்தையை வீட்டில் அமரவைத்துவிட்டு, துணிகளை காய போடுவதற்காக சங்கீதா சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். பணிகளை முடித்து வந்த சங்கீதா தனது மகனை காணாமல் போனதை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடினார்.

இந்த நிலையில் மழை நீர் தேங்கி கிடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சக்திவேல் தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.

Tiruppur North PS

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web