மும்மொழிக் கொள்கை! போராட்டத்தைத் தொடங்கியது திமுக!!
Updated: Feb 17, 2025, 07:33 IST

ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு 2500 கோடி ரூபாய் கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வட நாட்டில் மும்மொழிக் கொள்கை இருக்கிறதா? ஆங்கிலம் கூட இல்லாமல் ஒரு மொழிக் கொள்கை தானே உபி பீகாரில் உள்ளது என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்திற்கு முன்பு நாளை பிப்ரவரி 18ம் தேதி மாலை 4 மணிக்கு திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்