வெள்ளச்சேரியில் நீந்த 3 ரப்பர் படகுகள் தயார்.. வெள்ளத்திற்கு தயாராகும் சென்னைவாசிகள்!

 
Boat

வேளச்சேரி பகுதிகளில் மக்கள் தாங்களாகவே மழை வெள்ள பாதுகாப்பு அம்சங்களாகிய ரப்பர் படகு, லைப் ஜாக்கெட்களை வாங்கியுள்ளனர்.

சென்னையில் கனமழை பெய்யும் போதெல்லாம் வேளச்சேரி பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும். குறிப்பாக, டான்சி நகர், சீதாராம் நகர், ராம் நகர், விஜயநகர், செல்வாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கே தவிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக வயது முதிந்தவர்கள், கருவுற்ற பெண்களை மீட்பதில் சிக்கல் ஏற்படும்.

அதேபோல், வேளச்சேரி மக்கள் ஒவ்வொரு முறை மழை வரும்போதும், அவர்களின் வாகனங்களை பாதுகாக்கவும் பெரும் சிரமம்படுவர். தற்போது கன அல்லது மிக கன மழை எச்சரிகை விடுத்ததும், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்கள் கார்களை நிறுத்தி பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களை அருகாமையில் இருக்கும் தங்களின் உறவினர்கள் வீடுகளில் நிறுத்துவது உள்ளிட்ட விஷயங்களையும் செய்கின்றனர்.

Boat

இந்நிலையில் டான்சி நகர் பகுதி மக்கள் புதுவிதமாக யோசித்துள்ளனர். அதன்படி, குடியிருப்பு சங்கத்தினர் இணைந்து மழை வெள்ளத்தில் இருந்து தப்பித்து பத்திரமாக வெளியேற படகுகளை வாங்கியுள்ளனர்.

டான்சி நகர் குடியிருப்பு நலச்சங்கத்தினர் அனைவரும் இணைந்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி 3 ரப்பர் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். மேலும் கனமழை முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படும் பட்சத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான பால், தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் இருப்பு வைக்கவும் டான்சி நகர் மக்கள் தீர்மானித்துள்ளனர்.


இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், வெள்ள பாதிப்பின் மீது மீட்பு பணிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட படகுகள் ஈடுபட வேண்டும், ஆனால் மாநகராட்சி நிர்வாகத்திடம் போதிய உபகரணங்கள் இல்லாததால், கடும் இன்னலுக்கு உள்ளாவதாக வேதனை தெரிவித்தனர். இதன் காரணமாகவே மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தாங்களே படகுகளை வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

From around the web