அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! விஜய் தந்தை எஸ்.ஏ.சி தடாலடி பதில்!!
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு விட்டு ஆளுநரை சந்திப்பதா? என்று தவகெ தலைவர் விஜய் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களையும் சந்திக்காமல் சென்று விட்டார் விஜய். இதுவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் - விஜய் சந்திப்பு குறித்து விஜய் யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர்,அரசியலுக்கு வந்துவிட்டார், அப்போது இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று சூரியன் படத்தில் கவுண்டமணி சொல்லும் பிரபல வசனம் தான் இந்தப் பதில் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சொந்த மகனையே கலாய்க்கிறாரா எஸ்.ஏ.சி என்று கேள்வியும் எழுப்பிகிறார்கள் வாட்ஸ் அப் வாசிகள்.
ஆளுநர் பதவியை எதிர்த்து விட்டு ஆளுநரை சந்தித்ததில் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு உடன்பாடு இல்லையோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.