இது இடைக்காலத் தீர்ப்பு தான்... வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு தகவல்!!
Oct 13, 2025, 18:59 IST
கரூர் துயரச் சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை சிபிஐ க்கு மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவெகவினரிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்பு தான். தமிழ்நாடு அரசை மனு செய்யும் படி நீதிமன்றம் கேட்டுள்ளது. மோசடியாக மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தத் தீர்ப்பை திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்று வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்
மேலும் கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தீர்ப்பால் எந்த பயனும் இல்லை என்றும் வில்சன் கூறியுள்ளார்.
