பயப்படுறமாதிரி ஒண்ணும் இல்லீங்க.. சபாநாயகரை சந்தித்தற்கு செங்கோட்டையன் விளக்கம்!!

 
Sengottaiyan

எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் ஏழாம் பொருத்தமாகி உள்ள நிலையில் நேற்று சபாநாயகர் அப்பாவு வை அவரது அறையில் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்த சந்திப்பு அதிமுகவிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை பிளவுபடுத்தும் நோக்கத்தில் சபாநாயகரை சந்தித்து தனக்கு தனி இருக்கை கேட்டாரா? அல்லது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலைத் தந்து தங்களை தனி அணியாக அறிவிக்கக் கோரினாரா என்ற கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில்,  தன்னுடைய தொகுதியில் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கவே சபாநாயகரை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். செங்கோட்டையன் கூறியது உண்மை என்றால் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெரிந்து விடும். அதை மட்டும் இல்லாமல் வேறு ஏதும் கோரிக்கை வைத்திருந்தாலும் விரையில் தெரிய வந்து விடும்.

From around the web