தகர கொட்டகைக்குள் 2000 பேர்?.. கட்சிக் கூட்டமா? ஜனநாயகன் பட விளம்பர நிகழ்ச்சியா?

 
Vijay Vijay

உள்ளரங்கில் நடைபெறும் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு க்யூ ஆர் கோட் உடனான நுழைவுச்சீட்டு 2000 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் இது வரையிலும் செய்யாத புதிய நடைமுறையை விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கரூரில் திமுக முப்பெரும் விழா நடந்து முடிந்த உடன், எனக்கு இதைவிட அதிக கூட்டம் கூடும் என்று நிருபிக்க முயன்ற நடிகர் விஜய்க்கு 41 உயிர்கள் பலி என்ற பெரும் சோகம் தான் கிடைத்தது. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு கரூர் சம்பவத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று மீண்டும் அதிரடியாக தெரிவித்தார்.

கூட்டணிக்கு வந்து விடுவார் என்று காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது பேரிடியாக வந்த நிலையில், அதிமுக தலைவர்கள் விஜய் கட்சியை விமர்சிக்கத் தொடங்கினர். இது விஜய்க்கு சாதகமான சூழலைத்தான் உருவாக்கியது. மீண்டும் கட்சி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் விஜய். டிசம்பர் 6ம் தேதி சேலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில் போலீசார் தரப்பில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியதுடன் வேறு ஒரு தேதிக்கு விண்ணப்பியுங்கள் என்றும் கூறியுள்ளனர். சேலம் கூட்டம் எப்போது நடக்கும் என்று தெரியாத நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாக தவெக தலைமை நிலைய அறிவிப்பு வந்துள்ளது.

ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2000 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நடக்க உள்ளதாக போலீசாருக்கு பாதுகாப்பு கேட்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் விண்ணப்பித்துள்ளார். இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தை முன்னிட்டு, கல்லூரி வளாக சுவருக்கு மேல் உயரமான தகரத்திலான அடைப்புகளை ஏற்படுத்தியுள்ளர். விஜய் ரசிகர்கள் சுவரை தாண்டிக் குதித்து உள்ளே வந்துவிடுவார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு என்று தெரிகிறது. வெளியே இருந்து பார்ப்பதற்கு தகரக் கொட்டகை போன்றே இது தோற்றத்தைத் தருகிறது.

மேலும் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோட் உடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. டிக்கெட் கொடுத்து கூட்டம் கூட்டுவது எந்தக் கட்சியிலும் இது வரையிலும் இல்லாத ஒன்றாகும். ஒருவேளை ஜனநாயகன் பட நிகழ்ச்சியாக இருக்குமோ?


 

From around the web