காதல் இல்லாமல் ஒன்றுமே இல்லை! சொன்னது யார் தெரியுமா? 

 
Valentines Day

நேற்று பிப்ரவரி 14ம் தேதி உலகமெங்கும் வேலண்டைன்ஸ் டே கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்று இந்தியாவில்  கொண்டாடப்பட்டாலும், பிரியமானவர்களுடன் அன்பை பரிமாறிக் கொள்ளும் நாளாகத் தான் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. ஆண் பெண் பாலின பாகுபாடின்றி அன்பு செலுத்தும அனைவருக்கும் வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். 

காதலர் தின கொண்ட்டாட்டத்தையொட்டி நாம் தமிழர் கட்சி சீமான் பாரதியார் மற்றும் புதுவை ரத்தினதுரை எழுதிய இரண்டு கவிதைகளை தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்தக் கவிதைகள்; 

”உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்
உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!

தன்னைப்போல் பிறரையும் நேசி
என்றார் இறைமகன் ஏசு!

அண்டை அயலானுக்கும் அன்புசெய்
என்றார் இறை தூதர் நபிகள் நாயகம்!

அன்பே சிவம் என்றார் திருமூலர்!

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!
எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!

கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!

என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;
அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!

காதலில் ஒன்றுமில்லை;
ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;
காதலுக்காக யாரும் சாகக் கூடாது;
ஆனால் காதலிக்காமலும் யாரும் சாகக் கூடாது!

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்
அதனாலே மரணம் பொய்யாம்.”

- பெரும்பாவலர் பாரதி

”நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்
பலமிழந்து போனால்
இனமழிந்து போகும்
ஆதலால், மானுடனே
தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்!”

- புதுவை ரத்தினதுரை

From around the web