தங்கம் விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் விலைமதிப்பற்ற இந்த உலோகத்தை வாங்குவதை காட்டிலும், எளிதாக விற்று விடுகிறார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தை வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிதானது. சிறிய நகரங்களில் இருக்கும் பலருக்கு பங்குகளை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், தங்கம் என்றால் என்ன? அதை எப்படி விற்பது? எப்படி வாங்குவது? என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகிறார்கள். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி, ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.54,080-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,537-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி, ரூ.5,537-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 97,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.97,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.