தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை.. இன்றைய நிலவரம் என்ன?

 
Gold

உலகத்திலேயே அதிக தங்கம் வாங்கும் மக்கள் உள்ள நாடுகளை பட்டியல் எடுத்தால் இந்தியா அதில் நிச்சயம் முன்னணி இடத்தை பிடிக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு தங்கத்தை தங்கள் கலாச்சாரமாகவும் வாழ்வியலின் அங்கமாகவும் இந்திய மக்கள் பார்க்கிறார்கள். இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 1.5 கோடி நகைகள் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 18 கோடி நகைகள் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விஷேசத்திற்கும் தங்கம் தான் பிரதானமாக இருக்கிறது. தங்கம் முதலீடு சார்ந்தும் இந்தியாவில் அதிகமாக வாங்கப்படுகிறது. அப்படி வாங்கும் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்ள தவறினால், அது பணப்பையை கடிக்கும். எனவே, தங்கத்தை வாங்குவதற்கு முன்பு சந்தையில் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்வது மிகமிக முக்கியமாகும். தங்கத்தின் விலை ஊருக்கு ஊர், கடைக்கு கடை மாறுபடும் வாய்ப்புள்ளது.

Gold

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி, ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,669-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி, ரூ.4,669-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold-Price

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 79,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.80,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web