தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 
TN-Govt

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

IPS

தெற்கு மண்டல ஐஜியாக பிரேமானந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயராமன் மாநில குற்ற ஆவண பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TRansfer

ஆயுதப்படை ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐஜியாக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

From around the web