பாஜக பேரணியில் கண்ணகி வேடமிட்ட நாடக நடிகை கதறல்!

 
BJP Kannaki

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் மதுரையில் மகளிரணி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்க வில்லை.

பேரணிக்கு அனுமதி தராத நிலையில்  போலீசார் தடுத்து நிறுத்தி திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். இந்த பேரணியில் கண்ணகி வேடமிட்ட பெண் ஒருவர் நீதி வேண்டும் என்று கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னனிடம் முறையிடும் வசனத்தைக் கூறி ஆவேசமாக முழக்கமிட்டார்.

போலீசார் அவரை கைது செய்த போது தான் ஒரு கூத்துக் க்லைஞர் என்றும் பாஜகவினர் பணம் கொடுத்து அழைத்ததால் வந்தேன் என்றும் கண்ணீருடன் முறையிட்டார். சாயங்காலம் திருநெல்வேலியில் நிகழ்ச்சி இருக்கிறது அதற்குச் செல்லவேண்டும் என்றும் சொல்லியுள்ளார். ஆனால் போலீசார் இது தடுப்புக் காவல் தான், மாலையில் விட்டுவிடுவோம் என்று கூறி மற்றவர்களுடன் சேர்த்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். 

கண்ணகி வேடமிட்ட நடிகையின் ஆவேச முழக்கமும், கண்ணீருடன் போலீசாரிடம் முறையிட்ட காட்சியின் வீடியோவும் சமூகத் தளத்தில் வைரலாகி வருகின்றது. கட்சியில் ஆள் இல்லாமல் பணம் கொடுத்து நாடக நடிகையை கூட்டி வந்துள்ளனர் என்று பாஜகவின் பேரணியையும் கேலி செய்து வருகிறன்றனர்.

From around the web