இரவில் பூங்கா உள்ளே எரிந்து கொண்டிருந்த பெண்.. சென்னையில் பயங்கரம்!

 
Chennai

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டை திருநகர் பகுதியில் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு 7 மணிக்கு பெண் ஒருவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

fire

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதான உஷா என்பவர் தெரியவந்தது. இவர் எதற்காக திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்திய போது, குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் பலமுறை இதுபோன்ற தற்கொலைக்கு முயன்றயவர் நேற்று இரவு பூங்காவிற்கு வந்தவர் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அருகில் இருந்த சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது என்று போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MGR Nagar PS

பின்னர் உயிரிழந்த உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web