துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும்! செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு!!

 
5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு – செங்கோட்டையன்!

அதிமுக மீண்டும் இரண்டாக உடையுமா என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல் வலுத்து வருவதாகத் தெரிகிறது.

கோபியில் நடைபெற்ற எம்.ஜி,ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் தன்னிலை விளக்கம் அளித்ததோடு, அவரை ஜெயலலிதா பாராட்டிய ஆடியோவையும் ஒலிபரப்பினார். செங்கோட்டையனுக்கு பதில் சொல்லும் வகையில் எதிர்க்கட்சி துணைத்தலைவரும் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியுமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஈரோடு அத்தானியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.2026-ல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

செங்கோட்டையன் குறிப்பிட்ட துரோகிகள் யார் என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரனை இணைத்து ஓரணியாகப் போட்டியிட மறுத்த எடப்பாடி பழனிசாமியைத் தான் துரோகி என்று சாடுகிறாரா செங்கோட்டையன் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அமைதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் போர்க்கொடியை எப்படி சமாளிப்பார். எஸ்.பி.வேலுமணியின் குடும்ப திருமண விழாவில் சமரசம் ஏற்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

From around the web