தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

 
High-Court

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்வேறு சட்டத்திருத்தங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திருத்தங்கள் மூலம் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்ற செயல், நியாயமானது இல்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பில் எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும்  இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பொறுப்புக்கு நியமனம் செய்யும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில், இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.

From around the web