சிறுமியை விரட்டிய தெரு நாய்கள்.. அலறி கூச்சலிட்ட சிறுமி.. பகீர் வீடியோ!

 
Karur

அரவக்குறிச்சி அருகே சிறுமியை 3 தெரு நாய்கள் கடிக்க விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் ரசூல் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆனால் அப்பகுதி முழுவதும் ஏராளமான நாய்கள் சுற்றி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள், பொதுமக்களை துரத்தி கடித்து வருகின்றது.

dogs

அதனால் அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடமும், அரசு அதிகாரியிடமும் பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி அந்த வழியாக பானு என்ற சிறுமி சென்றுள்ளார். அப்போது மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமையை கடிக்க துரத்தி உள்ளது. அப்போது அருகே இருந்தவர்கள் மூன்று நாய்களையும் துரத்தி விட்டனர். இதனால் சிறுமி காயம் இல்லாமல் தப்பித்தார்.


தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளபட்டி நகராட்சி நிர்வாகம் விரைந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமியை நாய்கள் துரத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

From around the web