தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்.. 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

 
Rain

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (டிச.18) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Rain-report

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (டிச.18) பொது விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உ்ளளது. அதே போல் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

From around the web