பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

 
exam

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி தொடங்கிய 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25-ம் தேதி முடிவடைந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைந்தது.

Exam

இதையடுத்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. 103 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து, அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு உள்ளன.

மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண் இணைப்பு பணிகள் துவங்கி இருக்கின்றன. இந்நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் பரவியது.

DPI

இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, மே 6 மற்றும் மே 10-ம் தேதிகளில் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

From around the web