சாம்பாரில் கிடந்த எலி.. உணவகத்தில் அதிர்ச்சி.. பரபரப்பு காட்சிகள்!

 
Ooty

உதகையில் தனியார் உணவகத்தில் சாப்பிட்ட உணவில் எலி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலைச்சுற்றுலா என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி (உதகமண்டலம்). இங்கிருக்கும் அடர்ந்த காடுகள், பசுமை நிறைந்த புல்வெளிகளும், தூய்மையக சில்லென்று வீசும் காற்றும், வருடிச் செல்லும் மேகங்களும் என பல்வேறு சிறப்பம்சங்களைச் கொண்ட சுற்றுலா பகுதியாக திகழ்கிறது. இங்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.

Rat

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஜெகன் என்பவர் தனது குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். சுற்றுலா செல்வதற்கு முன் காலை உணவை உண்பதற்காக மைசூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்று காலை உணவு உண்ணும்போது, சாம்பாரில் இறந்த நிலையில் ஒரு எலி இருந்துள்ளது.

இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த ஜெகன், இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, காய்கறிகளில் சிறிய அளவில் புழு இருந்து இருக்கலாம் என்று சமாதானம் பேசி வெளியே அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் சமாதானம் ஆகாத ஜெகன், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளார். 

தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தொடர்ந்து அனைத்து உணவகங்களிலும் எவ்வாறு உணவு தயாரிக்கபடுகிறது, சுகாதாரமான முறையில் உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், சம்மந்தப்பட்ட உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இங்கு இதுகுறித்து ஏதேனும் தகவல் உறுதி செய்யப்பட்டால் அந்த உணவகத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது, இறந்த நிலையில் எலி இருந்த உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணி ஜெகன் நலமுடன் இருப்பதாகவும் இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web