சரசரவென குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு 1,520 ரூபாய் குறைவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
Gold

தங்கம் இந்திய பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. திருமணத்தின் போது பெண்களுக்கு சீர் கொடுப்பது தொடங்கி பெண் குழந்தை பிறந்து விட்டால் தங்கம் அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விடுகிறது.

நாம் வாங்கும் தங்கம் பல்கி பெருக வேண்டும். நம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 190 ரூபாய் குறைந்து, ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ரூ.53,200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,603-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 156 ரூபாய் குறைந்து, ரூ.5,447-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,00,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 4,500 ரூபாய் உயர்ந்து, ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.96.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web