மோடி, அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னவர் யார் தெரியுமா ?
Updated: Jan 1, 2025, 05:32 IST
இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவருக்கும் தனித்தனியே கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அதை எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
மலரும் ஆங்கில புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். ஆனால் அவருடைய எக்ஸ் தளத்தில் இந்த வாழ்த்துச் செய்தி இடம் பெறவில்லை
— O Panneerselvam (@OfficeOfOPS) December 31, 2024