அடுத்த ஷாக்... இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??. பாஜக ஐடி பிரிவு செயலாளரும் ராஜினாமா!

 
Dilip Kannan

தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டார். 

Dilip Kannan

சிடிஆர் நிர்மல் குமாரின் விலகல் அறிவிப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அன்பு சகோதரர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நிர்மல் குமாரை தொடர்ந்து கட்சியில் இருந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணன் வெளியேறி உள்ளார்.


பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றசாட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதில் “கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??..... இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

From around the web