இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.. உளுந்து, நல்லெண்ணெய் விலை உயர்வு..!
தமிழ்நாட்டில் உளுந்து, பாசிப்பயறு, நல்லெண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள். எனினும், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்தது.
இந்நிலையில் விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.13,500 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.10,200 ஆகவும் விற்பனையானது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.500 விலை உயர்ந்து ரூ.11 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.13,500 முதல் ரூ.16,500 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.3,200 முதல் ரூ.3,500 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரையிலும் விற்பனையானது. முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.50 விலை குறைந்து ரூ.3,050 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.660 விலை உயர்ந்து ரூ.7,425 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.1,380 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.
கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.6 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,450 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.4,080 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டாலுக்கு ரூ.360 விலை உயர்ந்து ரூ.6,960 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.200 விலை உயர்ந்து ரூ.5,100 ஆகவும் விற்பனையானது.
மைதா முதல் ரகம் ரூ.4,420 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,400 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1420 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,200 முதல் ரூ.6500 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6,400 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.18,900 ஆகவும், ஏ ரகம் ரூ.19,200 ஆகவும், சி ரகம் ரூ.17 ஆயிரம் ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.13,150 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11500 ஆகவும் விற்பனையானது.