பணம்..பணம்.. நீட் தேர்வு ஒரு ஊழல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டு!!

தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பத்திரிக்கையாளர் அரவிந்த் குணசேகர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற நீட் ஊழல் குற்றச்சாட்டு மீது சிபிஐ விசாரணை தொடங்கியிருப்பதை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
”Yet another case that proves NEET isn’t about merit; it’s only about the market. That’s why we’re saying it loud and clear, #NEETisnotNEAT, and we have every reason to.
தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்
அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என்று கூறியுள்ளார்.
Yet another case that proves NEET isn’t about merit; it’s only about the market. That’s why we’re saying it loud and clear, #NEETisnotNEAT, and we have every reason to.
— M.K.Stalin (@mkstalin) June 23, 2025
தரம், தரம் என்றார்கள்!#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும்… https://t.co/IUGaBIGwQy