கணவனை சடலமாக பார்த்த நொடியே உயிரை விட்ட மனைவி.. திருச்சி அருகே சோகம்!!

 
Trichy

திருவெறும்பூர் அருகே, கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எச்இபிஎஃப் தொழிற்சாலை நகரிய வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரசன்னா. இவரது மாமனார் கணேசன் (80). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த கணேசனை அவரது மனைவி கண்ணம்மாள் (70) பராமரித்து வந்துள்ளார்.

Dead Body

இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் மதியம் கணேசன் இறந்த நிலையில், அருகில் இருந்து பார்த்த அவரது மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் திருச்சி ஓயாமரி மயானத்தில் நேற்று தகனம் செய்தனர். இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

Trichy

இறப்பிலும் இணைபிரியாத தம்பதிக்கு அப்பகுதியினா் அஞ்சலி செலுத்தினா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web