ஆற்று மண்ணுக்குள் தோன்றிய அதிசய முருகர்.. சிலையை பார்த்து அரண்டுபோன மக்கள்!

 
Tiruvallur

திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்று மணலில் முருகன் கற்சிலை இருப்பதாக, உள்ளூர்வாசிகளிடம் கூறினர்.

Murgan

இதையடுத்து கிராமத்தினர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை வந்தனர். ஆற்று மணலுக்குள், 3.5 அடி உயரம், 150 கிலோ எடையிலான முருகன் கற்சிலையை கண்டெடுத்தனர்.

சிலையில், தலையில் மகுடமும், நான்கு கைகளும், இரண்டு கால்களும் உள்ளன. சிலை அமைப்பு கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைக்க உள்ளது.

From around the web