மெதுவடையில் ‘பல்லி’.. அதிர்ச்சியான வாடிக்கையாளர்.. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!

 
Dharmapuri

தர்மபுரியில் இயங்கும் தேநீர் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் பல்லி இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி நகரின் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் செயல்படும் தேநீர் மற்றும் பலகாரங்கள், சிற்றுண்டிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மெது வடை ஒன்றில் பல்லி இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

Dharmapuri

நேற்று அந்தக் கடையில் சண்முகம் என்ற வாடிக்கையாளர் மெதுவடை ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த கடை உரிமையாளரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பிய அவர் அந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோ பதிவாக்கி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டார்.

மேலும், உடல் நல பாதிப்பை தவிர்க்கும் வகையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த தேநீர் கடைக்கு சென்று உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.

Fine

பின்னர் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ.5,000 அபராதம் விதித்து கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தர்மபுரி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web