லிஃப்டில் துண்டான இடது கை... சிகிச்சை பலனின்றி முதியவர் பலி.. ஈரோடு அருகே சோகம்!

 
Erode

திண்டல் பகுதியில் லிஃப்டில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி அருகே சுப்பிரமணி என்பவர் இஸ்திரிபணி செய்து வருகிறார். இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் விசிப்பவர்களிடம் இஸ்திரிக்கு துணிகளை வாங்க லிஃப்டில் சென்றுள்ளார்.

dead-body

அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியின் கை லிஃப்டில் சிக்கி துண்டானது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Erode Taluk PS

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web