மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கணவன்.. கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெறிச்செயல்.. தென்காசி அருகே பயங்கரம்!!

 
Tenkasi

சங்கரன்கோவில் அருகே மனைவி கள்ளக் தொடர்பை கண்டித்ததால் கணவன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). வேன் டிரைவரான இவருக்கு கனகா தேவி (32) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு முத்துலட்சுமி (14), கவின் (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மகாகிருஷணன் கனகா தேவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் மகாகிருஷ்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கனகா தேவி கண்டித்தார், இதனால் இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இரண்டு பேரும் வடக்கு அழகு நாச்சியார்புரம் தெற்கு காலனியில் உள்ள வீட்டில் இரண்டாக பிரித்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

murder

இந்த நிலையில் நேற்று தம்பதியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குருவிகுளம் போலீசார், உயிரிழந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் உயிரிழந்த இளம்பெண் யார் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற மர்மமான நிலை நீடித்த நிலையில் குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாருக்கு இளம்பெண்ணின் கணவர் மீது சந்தேகம் வந்தது. தலைமறைவாக இருந்த கணவனை பிடித்து கைது செய்து தொடர் கிடுக்கு பிடி விசாரணையில்  ஈடுப்பட்டனர்.

Kuruvikulam PS

விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.  “கள்ளத்தொடர்பை பற்றி மனைவி அவ்வப்போது குத்திக் காண்பித்து பேசியதால் என்னால் தூங்க முடியவில்லை. எப்படியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ய வேண்டும் என நினைத்து அவள் இருக்கும் அறைக்குள் புகுந்தேன். அப்போது அவள் சுதாரித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடினாள் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த அவளை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மனைவி கள்ளத் தொடர்பை கண்டித்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்த நிலையில் இரு குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web