ஆளுநர் வெளிநடப்பு! சட்டமன்றத்தில் பரபரப்பு!!
Jan 6, 2025, 10:01 IST
இன்று 2025ம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார் ஆளுநர் ஆர்,என்,ரவி.
மரபாக கடைப்பிடிக்கப்படும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநரின் நடவடிக்கை சரியானது அல்ல என்று மூத்த பத்திரிக்கையாளார் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக வெளியேற்றம் செய்ததாக ஆளுநர் மாளிகையிலிருந்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியானது. அது உடனடியாக நீக்கவும் பட்டுள்ளது.
தற்போது சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். உரை முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இன்றைய அவை நிறைவு பெறும்