ஆளுநர் ராஜினாமாவா? டிஸ்மிஸ்ஸா? - இந்து என்.ராம் கேள்வி!!

 
RN Ravi

தமிழ்நாடு அரசு சார்பில் 10 மசோதாக்களின் மீது முடிவு எடுக்காத ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சுயாட்சிக்கு வலு சேர்க்கும் இந்தத் தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராம் மிடம் கேட்ட போது, தன்மானமுள்ளவராக ஆர்.என்.ரவி இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒன்றிய அரசு மதித்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

ஆர்.என். ரவி ராஜினாமா செய்வாரா? ஒன்றிய அரசு ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்யுமா? அல்லது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்யச்சொல்லி ஆளுநர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்படுமா என்று விரைவில் தெரிந்து விடும்.

From around the web