சூடுபிடிக்கும் தேர்தல் களம்! 18 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் திமுக - அதிமுக.. 8 தொகுதிகளின் வேட்பாளர் யார் யார்?

 
DMK - ADMK

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. 

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உறுதி செய்ய தடுமாறியது. ஆனால் திமுக தலைமையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முடிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21, காங்கிரஸ் 10, மதிமுக 1, விசிக மற்றும் கம்யூனிஸ் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி நேற்று தான் இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. 

DMK

அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதிமுக தமிழ்நாட்டில் 6 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் நேரடியாக போட்டியிட உள்ளது. அதிமுக சார்பில் இதுவரை 16 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதும் 18 தொகுதிகளில் 8 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

தொகுதி பெயர் திமுக அதிமுக
வடசென்னை கலாநிதி  வீராசாமி ராயபுரம் மனோ
தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) செல்வம் ராஜசேகரன்
அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஏ.எல். விஜயன்
ஆரணி தரணி வேந்தன் கஜேந்திரன்
சேலம் செல்வ கணபதி விக்னேஷ்
ஈரோடு பிரகாஷ் அசோக்குமார்
தேனி தங்க தமிழ்ச்செல்வன் நாராயணசாமி

MKS - EPS

இந்நிலையில், இன்று அதிமுகவின் 17 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் திமுகவுடன் மோதும் மேலும் 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற முழு விவரம் தெரியவரும்.

From around the web