அவசர கோலத்தில் செயல்படும் தேர்தல் ஆணையம்! திமுக கடும் குற்றச்சாட்டு!!

 
R S Bharathi R S Bharathi

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செயல்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திய பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டியிருந்தார். 

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளார்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி , அவசர கோலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது என தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்தத்தை யாரும் முழு மனதோடு ஏற்கவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றும் கூறினார்.

From around the web