தரங்கெட்டவர்கள் திமுகவினர்! ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கடும் தாக்கு!!

 
L Murugan

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முட்டாள் என்று முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி பேசியதாகக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.

”மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை இழித்துப் பேசிய, திமுக எம்.பி.ராசாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுரை வந்த மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஜி அவர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கிக் காட்டுவோம் என சூளுரைத்தது முதலே திமுகவினர் பித்துப் பிடித்து அலைகின்றனர்.

அந்த வரிசையில் தான் இன்று, திமுக எம்.பி, ஆ.ராசா , மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை தகாத முறையில் பேசி இருக்கிறார். குடும்ப அரசியல் நடத்தி ஊழலின் உறைவிடமாக இருக்கும் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும் அவரது தொண்டர்களுக்கும், மரியாதைக்குரிய திரு.அமித்ஷா ஜி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற தைரியமோ திராணியோ இல்லை. கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் பாஜக தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசி வன்மத்தை கக்குகின்றனர்.

முன்னாள் முதல்வர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் மீதே நா கூசும் அளவிற்கு அவதூறுகளை அள்ளித் தெளித்த தரங்கெட்டவர்கள் தானே இந்த திமுகவினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் உங்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப் போவது உறுதி. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்திலும் கூட கொள்ளையடிக்கும் உங்களை, தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். இருள் சூழ்ந்த திமுக ஆட்சியில் மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். அவர்களுக்கு விடியல் தரப் போவது பாஜக- அதிமுக கூட்டணி தான்” என்று அறிக்கையில் கூறியுள்ளார் எல்.முருகன்.

உதகமண்டலம் நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவிடம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் எல்.முருகன். முன்னதாக மதுரையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று அமித்ஷா கூறியதைக் கண்டித்து, ஆதாரத்துடன் நிருபிக்கிறேன் இடத்தைச் சொல்லுங்கள் வருகிறேன் என்று சவால் விட்டிருந்தார் ஆ.ராசா. அமித்ஷா வைக் கண்டித்து தொடர்ந்து ஆ.ராசா பேசி வருவது குறிப்பிடத்தக்கது

 


 

From around the web