இரவோடு இரவாக ஓடோடிச் சென்ற முதலமைச்சர்... எஸ்கேப் ஆன விஜய்!!

 
CM Stalin CM Stalin

கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய் யின் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து உடனடியாக வெளியேறி விமானம் மூலம் சென்னை சென்றார் விஜய்.

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் உடனடியாக அரசு எந்திரத்தை முடுக்கி விட்ட முதலமைச்சர் இரவோடு இரவாக தனி விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் கரூர் சென்றார். குழந்தைகள் 10 பேர், 17 பெண்கள், 12 ஆண்கள் உட்பட 39 பேர்களின் உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் முதலமைசர் மு.க.ஸ்டாலின்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சென்ற விஜய் சென்னை சென்ற பிறகு , இதயம் நொறுங்கிப் போயுள்ளேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

From around the web