சொன்னதைச் செய்தார் முதலமைச்சர்.. கனிமொழி எம்.பி. பேட்டி!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வரவேற்றுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தேர்தல் நேரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி விவரங்கள் வெளியே வராமலேயே இந்த தீர்ப்பு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திமுக மகளிர் அணியினர் நீதி கேட்டுச் சென்ற போது எங்களை அங்கே செல்லவிடாமல் தடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் அரசு. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அவருடைய அரசு வழக்குப் போட்டு தண்டனைப் பெற்றுத் தர முடியாததால் தான் எதிர்க்கட்சியினரின் போராட்டங்களைத் தொடர்ந்து சிபிஐ ஐக்குப் போனது, குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் தான் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனம் இருந்தது என்றும் கனிமொழி எம்.பி.கூறியுள்ளார்.