டெக்னாலஜிக்கே சவால்.. ரிமோட்டை தொலைத்து விட்டு கடுப்பான ஸ்ரீதர் வேம்பு!!

 
Smart Fan Remote

சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடலில் இடையில் அவருடைய மருமகள் கேட்பது போல் ஒரு டயலாக் வரும், ”மாமா காஞ்சிப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா துன்பபடுறவங்க எல்லாம் அவங்க கவலையை தெய்வத்திடம் முறையிடுவாங்க, ஆனா தெய்வமே கலங்கி நின்னா அந்த தெயவத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்’ ன்னு அந்த மருமகள் பேசியிருப்பாங்க.

அப்படி ஒரு சம்பவம் தான் ஐடி துறையில் கொடிகட்டிப் பறக்கும் பாஜக ஆதரவாளர் ஸ்ரீதர் வேம்புவுக்கு நடந்திருக்கு போல. மனுசன் செம்ம டென்ஷன்ல  எக்ஸ் தளத்தில்  ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டுருக்காரு.

“புதுசா மாறிப்போன ஆபிஸ்ல ஃபேன்களுக்கு ரிமோட்டுடன் கூடிய ஸ்மார்ட் சுவிட்ச் மாட்டியிருக்காங்க. சுவற்றில் உள்ள சுவிட்ச்சைப் போட்டாத்தான் ரிமோட் வேலை செய்யும். சுவற்றில் சுவிட்சைப் போட்டுட்டு ரிமோட்டை தேடினா அது எஞ்சினியர் டெஸ்க்கில் உள்ள குப்பைகளில் எங்கோ ஒளிஞ்சி கிடக்கு.

கடுமையான வெயில் நாளில் ஒரு ஃபேனை போடுவது பெரும் பாடா இருக்கு. டெக்னாலஜி முன்னேற்றம்” என்று  அதில் குறிப்பிடப்பட்டிருக்கு.

அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் டெக்னாலஜி கம்பெனி நடத்துற ஒருத்தருக்கு ஒரு ரிமோட் கண்ட்ரோலால் வந்த சோதனையை பார்த்தீங்களா?

ஆனாலும், இந்தியாவிலேயே பிரபல சுவிட்ச் நிறுவனங்கள் மொபைல் ஆப் மூலமா ஃபேனை கண்ட்ரோல் பண்ணும் சுவிட்ச் அறிமுகப்படுத்தியது கூட இந்த டெக்னாலஜி ஜாம்பவானுக்குத் தெரியல்ல என்பது தான் வேடிக்கை!!


 

From around the web