சிறுவன் கையில் பற்றி எரிந்த தீ.. விஜய் பிறந்தநாளில் பயங்கரம்!

 
Chennai

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறுவன் ஒருவன் கையில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ பற்ற வைத்து சாகசம் செய்ததில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Youth-arrested-for-setting-fire-to-girlfriends-house

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவத்தால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என விஜய் தெரிவித்திருந்தார். ஆனாலும் சில இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் ஒருவன், நெருப்பில் எரியும் ஓடுகளை உடைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். அதற்காக சிறுவன் கையில் நெருப்பை பற்ற வைக்க, ஓடுகளை உடைத்த பின்னரும் சிறுவன் கையில் பற்றிய தீ அணையவில்லை. அதிலிருந்து அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றவரின் கையிலும் தீ பற்றியது.


பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோயை பார்த்த சிலர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web