பாட்டியுடன் கோவிலுக்குச் சென்ற சிறுவன் பலி... கண்ணீர் வர வைக்கும் தாயின் கதறல்!!

 
Chennai

சென்னையில் பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற 13 வயது சிறுவன் அலங்கார விளக்குக்காக போடப்பட்டிருந்த ஒயரில் மின்சாரம் கசிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கவின் (13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலில் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியைக் காண சென்றுள்ளார். 

shock

கோவிலில் இருந்த பூசாரி சாமியாடிக் கொண்டு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, அருகில் அலங்கார விளக்கு அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டையை கவின் பிடித்துள்ளார். அப்போது அதன் வழியே கொண்டு செல்லப்பட்ட சேதமடைந்த ஒயரில் கை பட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய அனுமதியின்றி அங்கிருந்த மின் விநியோகப் பெட்டியிலிருந்து மின்சாரம் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். 

Police

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற 13 வயது சிறுவன் அலங்கார விளக்குக்காக போடப்பட்டிருந்த ஒயரில் மின்சாரம் கசிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web