எல்லை மீறிச்செல்லும் ஒன்றிய பாஜக அரசு! முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் ஒன்றிய அரசின் பிரதமரின் கல்வித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உ.பி. பீகார் மாநிலங்களுக்கு அளித்துள்ள செயல் மூலம் ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது உரிமைகளைக் கேட்கும் தமிழ்நாட்டு மாணவர்களை தண்டிக்கும் செயல் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் எந்த ஒரு அரசும் கல்வித்துறையில் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டதில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்து 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் தற்போது உ.பி, பீகார் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான செயலுக்கு கல்வியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறியுள்ளனர்.