இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை.. தாயின் விபரீத முடிவு.. வேலூர் மருத்துவமனையில் பரபரப்பு

 
Vellore

தனது மற்றொரு குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த தாய் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்கேஷ் (28). இவரது மனைவி சுரேகா (23). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கருவுற்ற சுரோகவிற்கு கடந்த 23-ம் தேதி பிரவச வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அன்றிரவு சுரேகாவிற்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தை எடையாக குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தையை தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சுரேகா தனது மற்றொரு குழந்தையைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

dead-body

இந்நிலையில் நேற்று (செப். 30) மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றுள்ளார். அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சுரேகாவை மீட்டு, அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தவமிருந்து பெற்ற குழந்தை பார்க்க முடியாத ஏக்கத்தில், 4 வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vellore Taluk PS

இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை தரப்பிலோ, பிரசவ வார்டில் உள்ள தரைதளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட் பழுதாகியதாகவும் அதனைச் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் சுரேகா நான்காவது மாடியில் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, அவரோடு அவரது தாயும் இருந்துள்ளார் என தெரிவித்தனர்.

From around the web