ஒரு மணிநேரத்திற்கும் மேல் வராத ஆம்புலன்ஸ்.. நெஞ்சுவலியால் துடிதுடித்து உயிரிழந்த பெண்!

 
NIlgiris

நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி (43). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர், கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Heart

அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் அதிகமானதை தொடர்ந்து, பந்தலூர் பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், வழியால் துடித்துக்கொண்டு இருந்த வேளாங்கண்ணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தும், ஆம்புலன்ஸ் வராததால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்களிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web