துரோகத்துடன் கரம் கோர்த்துள்ள அதிமுக... கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!!
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய மண்டலப் பொறுப்பாளராக, மாவட்ட நிர்வாகிகளுடன் 2026 தேர்தலை சந்திப்பதற்காக கனிமொழி எம்.பி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
திருநெல்வேலி கிழக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்கள் சார்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. அதிமுக தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்களுடன் கரம் கோர்த்துள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
”இத்தனை ஆண்டுகளாக எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் இருந்தது அதிமுக. இப்போது டெல்லியில் இருந்து புதிதாக ஒரு பலம் கிடைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்களோடு கரம் கோர்த்து உள்ளார்கள். மக்கள் இவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டி அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் மக்களை சந்தித்து இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியை நம் தளபதிக்கு பெற்றுத் தரவேண்டும்” என்று பேசியுள்ளார்.
