காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்.. மும்பையில் இவர் என்ன பண்ணுறாருன்னு பாருங்க!!

 
Sridhar Vembu Sridhar Vembu

காஷ்மீரில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு எதிராக நாடு முழுவதும் மதவேறுபாடின்றி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தீவிரவாதிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும், தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஒரு மித்த குரலில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொந்தளிப்பான சூழலில் பாஜகவின் தீவிர ஆதரவாளரான சோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, மும்பையில் வடாப் பாவ் ஐ ருசித்து சாப்பிட்டு அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வரை வடா பாவ் ஐ எப்படி தெரிந்து கொள்ளாமல் இருந்தேன். முதல் முறையாக அனுபவித்து சாப்பிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நாடு கொந்தளிப்பான நிலையில் இருக்கும் போது ஆளும் அரசிற்கு தீவிர ஆதரவாளாராகக் காட்டிக்கொள்ளும் ஒருவர் செய்யும் செயலா இது என்று சமூகத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


 

From around the web