அரியலூரில் இளம்பெண் உடல்கருகி பலி.. வீட்டில் விளக்கேற்றிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

 
Ariyalur

ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் விளக்கேற்றியபோது பெண்ணின் சேலையில் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமம் வாண்டையார் தெருவில் வசித்து வருபவர் அப்பாதுரை. இவரது மகள் ஷோபனா. சம்பவத்தன்று ஷோபனா வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது அவரது சேலையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவியது. இதனால் ஷோபனா அலறி துடித்துள்ளார். 

fire

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து தீயை அணைத்து ஷோபனாவை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஷோபனா அனுமதிக்கப்பட்டார்.

Jayankondam PS

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web