இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
TASMAC

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 5,300 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில், அண்மையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பொதுவாக அரசு அறிவித்துள்ள கட்டாய விடுமுறை நாட்களில் மட்டும் மூடப்படும். அந்த வகையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடுத்த 3 நாட்கள் மூடப்பட உள்ளது.

Tasmac

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில், இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30-ம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

TASMAC

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் வரும் 30ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற இருப்பதால் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு கருதி வரும் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

From around the web